என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்கூறுவது கடமை

0
624
north province military government advice duty Tamil news latest

north province military government advice duty Tamil news latest
அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக்கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என்பது தவறான சிந்தனை.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், படைத்தரப்பு என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் படைத் தரப்புக்கும் எடுத்துக்கூறுவதே தங்களது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணியை வடமாகாணத்தில் தம்வசம் வைத்துள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்தளவு இல்லை என்று கூறப்படுவதாகவும், புள்ளி விபரங்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுகின்றன என்றும் அவர் தெரிவி;த்துள்ளார்.
north province military government advice duty Tamil news latest

More Tamil News

Tamil News Group websites :