களமிறங்கப்போகிறது ஹோன்டா அமேஸ் 2018

0
13607
new honda amaze production begins

(new honda amaze production begins)
2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோன்டா அமேஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. தற்போதைய மாடலை விட பல்வேறு அம்சங்கள் மாற்றப்பட்டுள்ளதால் புதிய மாடல் அதிக பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

வெளிப்புறங்களில் இதன் வடிவமைப்பு ஹோன்டா சிட்டி போன்று காட்சியளிக்கிறது. கூர்மையான வளைவுகள், பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய க்ரோம் கிரில் மற்றும் ஹோன்டா லோகோ நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்களில் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமேஸ் மாடலில் 15 இன்ச் அலாய் வீல், சி வடிவம் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பூட் லிட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை விட புதிய அமேஸ் அதிக அகலமாக உருவாக்கப்பட்டு, உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது.

உள்புறம் டூயல்-டோன் டேஷ்போர்டு பெய்க் மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோலில் டச் பட்டன்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

2018 ஹோன்டா அமேஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 88 பிஹெச்பி பவர், 109 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் இன்ஜின் 100 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல்ஸ, 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

new honda amaze production begins