மிகவும் விரும்பத்தக்க இந்தியர்களின் பட்டியலில் பாகுபலி நாயகனுக்கு இரண்டாவது இடம்

0
555
Prabhas second place with 6 thousand rejections.

(Prabhas second place with 6 thousand rejections)

 

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் 6 ஆயிரம் வரன்களை நிராகரித்த நடிகர் பிரபாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்

உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற இந்திய திரைப்படம் பாகுபலி மற்றும் பாகுபலி-2. இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் உலகப் புகழ் பெற்றார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகளும் குவியளும் தற்போது மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

மேலும் இவருக்கு பல்வேறு காதல் விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் உள்ளது. பாகுபலி படப்பிடிப்பில் மட்டுமே சுமார் 6,000 காதல் விண்ணப்பங்களை பிரபாஸ் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பிரபாஸ் சூப்பர் ஸ்டார் வடிவில் திகழ்ந்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவர உள்ள சாஹோ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அண்மையில் பிரபல நாளிதழ் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்திய அளவில் அனைத்து தரப்பினராலும் மிகவும் விரும்பத்தக்க ஆண்கள் பட்டியலில் நடிகர் பிரபாஸ் இரண்டாம் இடத்திலுள்ளார்.

முதலிடத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Prabhas second place with 6 thousand rejections)

 

Tamil News Group websites :