விருது விழாவில் ஸ்ரீதேவியாக வலம் வந்த மகள். கண் கலங்கிய போனி கபூர்.

8
3131
Indian Actress Sridevi Rewarded Best Actress National Award

(Indian Actress Sridevi Rewarded Best Actress National Award)

இந்திய திரையுலகத்தின் நட்சத்திர நடிகை ஸ்ரீதேவியை யாராலும் இலகுவில் மறந்து விட முடியாது. தனது நடிப்பாலும் அழகாலும் கோடி ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். தமிழ்நாடு, சிவகாசியை பிறப்பிடமாக கொண்ட ஸ்ரீதேவி, கமல், ரஜினி என்று பல முன்னணி நச்சத்திரங்களோடு ஜோடியாக நடித்து 80’களில் கொடிகட்டிப் பறந்தவர்.

இதன் பின்னர் இந்தியில் வாய்ப்புகள் வர, மும்பைக்கு பறந்தார். சில காலம் இந்தியில் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி அங்கும் தனது அழகாலும் சிறந்த நடிப்பாலும் இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டினார்.

பின்னர், இந்தி திரைப்பட இயக்குனர் போனி கபூரை காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் ஜான்வி தற்போது படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம், டுபாயில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கு பற்ற சென்றிருந்த வேளை, ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இவர் மாரடைப்பில் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்திய சினிமாவையே உலுக்கிய இவரின் இழப்பு, இவரின் குடும்பத்தை மிகவும் வாட்டியது. மகள்கள் தாய் இன்றி தினமும் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்னர் இறுதியாக நடித்த ‘MOM’ திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது.

இவரின் அபாரமான நடிப்பு, தாய் மகள் பாசம் , குடும்ப பெண்ணின் வாழ்க்கை என ஒரு பெண்ணின் வாழ்க்கையை முன்னுதாரணமாக காட்டி சிறப்பான நடித்து அனைவரது பாராட்டையும் அப்போதே பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் திரைப்படத்துறைக்கான உயர்ந்த விருதான இந்த வருடத்தின் தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. ‘MOM’ படத்தில் நடித்திருந்த ஸ்ரீதேவிக்கு ‘சிறந்த நடிகைக்கான’ தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

விருதை பெறுவதற்காக ஸ்ரீதேவி குடும்பத்திலிருந்து, அவரின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி,, குஷி சென்றிருந்தார்கள். இதில் ஜான்வி தாயார் ஸ்ரீதேவியின் பட்டு புடவை உடுத்தி, தாயாரின் நினைவுகளை சுமந்து, பார்ப்பதற்கு ஸ்ரீதேவி போல வந்திருந்தார். ஸ்ரீதேவி முன்னர் ஒரு விருது விழாவுக்கு உடுத்த அதே பட்டு புடவையில் ஜான்வியும், இளைய மகள் குஷி Half-Saree யிலும் வந்து தாயார் ஸ்ரீதேவிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் விருது விழாவில் ஸ்ரீதேவியின் விருது அறிவிக்கப்பட்ட போது போனி கபூர் கண்கலங்க அவரது மகள் கண்ணைத் துடைத்து அவரை தேற்றிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இறந்தாலும் வாழும் ‘Indian Lady Super Star’ ஸ்ரீதேவிக்கு மீண்டும் கிடைத்த பெரும் கெளரவம் இதுவென்றால் மிகையாகாது.

Tag: Indian Actress Sridevi Rewarded Best Actress National Award