ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

0
466
hunger strikes against Sterlite plant Tuticorin district Tamil Nadu

(hunger strikes against Sterlite plant Tuticorin district Tamil Nadu)

 

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் 82ஆவது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், தபால்தந்தி காலனி, பாத்திமா நகர், பனிமயமாதா ஆலய வளாகம், புனித ஜார்ஜ் ஆலய வளாகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், ஆண்டுக்கு 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வருகிறது.

குறித்த அந்த ஆலையின் அருகே மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு உலக தமிழர்கள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை அனுமதியை புதுப்பிக்கக் கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் விண்ணப்பித்த மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஏப்ரல் 9ஆம் தpகதி நிராகரித்தது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேன்முறையீடு செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர் ஜெயகுமார் எத்திராஜ் ஆகியோர் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த பின்னர் வழக்கை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்கள்இ மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

(hunger strikes against Sterlite plant Tuticorin district Tamil Nadu)

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here