அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் புதிய ஏற்பாடுகள்!

0
613
Full-body x-ray scanners Australia

Full-body x-ray scanners Australia

அவுஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் உள்நாட்டு பயணிகளை சோதனை செய்யும் புதிய ஏற்பாடுகளை உள்துறை அமைச்சு வெகுவிரைவில் அமுல்படுத்தவுள்ளது

இந்த பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, உள்நாட்டு விமானநிலையங்களிலும் பயணிகளின் உடலை முழுமையாக சோதனையிடும் இயந்திரங்கள் (Full-body x-ray scanners) பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இயந்திரங்கள் தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விமானநிலையங்களில் கொண்டுவரப்படவுள்ள மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளாக – தடைசெய்யப்பட்ட மதுபானம், நறுமணப்பூச்சுக்கள், குழந்தைகளுக்கான பால்மா போன்ற பொருட்களின் மீதும் தீவிர சோதனைகளை மேற்கொள்வதற்கு பரிசீலித்துவருவதாக தெரிகிறது.

வெளிநாட்டு பயணிகள் வந்திறங்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்நாட்டு பயணிகளுக்கும் பயன்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சு மீது ஏற்கனவே பல கண்டனங்கள் எழுந்தாலும், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை கருதி இந்த ஏற்பாடுகளை கொண்டுவருவது அத்தியாவசியமானது என்று உள்துறை அமைச்சு மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது