இரட்டை இலை சின்னம் பெற இலஞ்சம்: 15 ஓடியோ சி.டி.க்கள் டில்லி நீதிமன்றம் தாக்கல்

0
555
CDs were filed court

(CDs were filed court)

 

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 15 ஓடியோ சி.டி.க்களை டில்லி பெலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணியினர் உரிமை கோரியதில் சின்னம், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது.

ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் பெற தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தினகரன் அவரது நண்பர் மல்லிகார் ஜூனா, சுகேஷ் சந்திர சேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ்சந்திரசேகர் தவிர மற்றவர்கள் பிணையில் விடுதலையானார்கள்.

இது தொடர்பான வழக்கு டில்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையின் போது வழக்கின் ஆதாரங்களை சி.டி.யாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று டில்லி பொலிஸாருக்கு நீதிபதி அரவிந்த்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தினகரன்- சுகேஷ் பேசியதாக கூறப்படும் 15 ஓடியோ சி.டி.க்களை பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் சுகேசும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலையும் 15ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

(CDs were filed court)

Tamil News Group websites :