பா. ஜ.கவை வீழ்த்துவது தான் என் இலட்சியம்; அதுதான் என் அரசியல் – நடிகர் பிரகாஷ்ராஜ்

0
521
goal bring down Bharatiya Janata Party

(goal bring down Bharatiya Janata Party)

 

பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது தான் இலட்சியம் எனவும் அதுதான் என் அரசியல் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:-
எனது நண்பரும் பத்திரிக்கையாளருமான கௌரி மரணம் என்னை மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. நாம் அவரை தனியாக போராட வைத்து விட்டோம். இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். என் குரலை இப்போது நிறுத்த பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.

மோடியிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்னாகிவிட்டது என்று கேட்டால் உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார். திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார். 100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பேசுகிறார். இந்த 4 வருடம் என்ன நடந்தது என்று பேசுவது இல்லை.

நான் ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு வாக்களிக்க வேண்டும். மோடி எவ்வளவு பேசினார். ஆனால் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்?

நான் மோடிக்கு எதிராக பேசினால் உடனடியாக என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு பயங்கரவாதமும் வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன், அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால் இப்படித்தான். பாகிஸ்தான் போல இந்தியாவும் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
சினிமாத்துறையில் பிரச்சினை இருக்கிறது. நான் மோடிக்கு எதிராக பேசியதற்கு பின் எனக்கு பொலிவூட்டில் வாய்ப்பு கொடுக்கவே இல்லை. நெருங்கிய நண்பர்கள் கூட விலகி சென்றுவிட்டார்கள்.

தென்னிந்திய படங்களில் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இருக்கட்டும். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது. 365 நாள் வேலை பார்த்த நான் இனி குறைவாக பார்ப்பேன். போனால் போகட்டும். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

நான் அரசியல்வாதிதான் முக்கியமாக நான் அரசியலுக்கு வந்து விட்டேனா என்று கேட்கிறார்கள். ஆம் நான் அரசியலுக்கு வந்து விட்டேன்.

நான் இப்போது அரசியல் வாதிதான். நான் ஒன்றும் தேர்தலில் நிற்க போவது இல்லை. நான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை. நான் எம்.எல்.ஏ. ஆக போவதில்லை.

இப்போது இருக்கும் பெரிய அசுரன் பாரதிய ஜனதா தான். அவர்களை வீழ்த்துவதுதான் என் இலட்சியம், அதுதான் என் அரசியல்.

goal bring down Bharatiya Janata Party

Tamil News Group websites :