(Rahul said BJP’s election manifesto weak)
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை பலவீனமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
ஒரு இலட்சம் ரூபா வரையிலான விவசாயக் கடன்கள் ரத்து, ஏழை பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன், கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, 1.5 இலட்சம் ரூபா கோடியில் பாசனத் திட்டங்கள், பசு பாதுகாப்பு திட்டம், மலிவு விலையில் அன்னபூர்ணா உணவகங்கள், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், 25 ஆயிரம் ரூபா திருமண நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை பலவீனமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பலவீனமான ஒன்று. பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க வேண்டுமென்றால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் உருவாகியிருக்கும் அது வலுவிழுந்த மனையில் வடிவமைக்கப்பட்ட கற்பனை கட்டிடமாக உள்ளது.
அதில் வாக்காளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை படித்தவர்கள் யாரும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை படித்து நேரத்தை விரயமாக்க வேண்டாம்.
மொத்தத்தில் அதற்கு 5க்கு ஒரு மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும். பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை மக்கள் புறக்கணிப்பதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
(Rahul said BJP’s election manifesto weak)
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு