மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி

0
2265
Three girls sexually abused

(Three girls sexually abused Four people arrested)
நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொடூரச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று சிறுமிகளின் தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று சிறுமிகளையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன், சிறுமிகளின் தாயாரும் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் 14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார்,

குறித்த மூன்று சிறுமிகளையும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமிகள் வழங்கிய தகவலுக்கு அமைய கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சிறுமிகளின் தந்தை உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கந்தப்பளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Three girls sexually abused Four people arrested