புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!

0
841
People accumulated Mahathir campaign, Mahathir campaign, mahathir meeting putrajeya, malaysia14 election, malaysia,

{ People accumulated Mahathir campaign }

மலேசியாவில், இங்குள்ள சுல்தான் மிசான் ஜைனால் அபிடின் பள்ளிவாசலின் கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற துன் மகாதீர், நிக் ஒமார் நிக் அப்துல் அசிஸ் முதலானோர் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

புத்ராஜெயாவை பொருத்தவரையில் அங்கு பொதுச்சேவை ஊழியர்கள்தான் அதிகம் இருப்பதால் அது தேசிய முன்னணியின் கோட்டையாக கூறப்பட்டு வந்தது. அதனால், அரசாங்கத்திற்கு பயந்து அந்த பிரச்சாரத்தில் அதிகமானோர் கலந்துக்கொள்ள வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் தேசிய முன்னணியை கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் மிக பெரிய கூட்டம் அதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சாரம் முகநூலில் துன் மகாதீரின் பக்கத்தில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது. அதனை ஏறக்குறைய 50,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் துன் மகாதீர், நிக் ஒமார் ஆகியோருக்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, நிக் ஒமார் கூறுகையில் மறைந்த தனது தந்தை டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் உடல் நலம் சரியில்லாத நிலையில் மறைந்த ஜ.செ.க. தலைவர் கர்ப்பால் சிங்கைச் சந்திக்க ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பல்லின மக்களைக் கொண்டிருக்கும் இந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் சரிசமமான அனுசரணை வழங்கப்பட வேண்டும் என்கிற நிக் அசிஸின் நம்பிக்கையை இது காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

துன் மகாதீர் பேசுகையில், 2.6 பில்லியன் நன்கொடை குறித்து கேள்வியெழுப்பினார். தனிபட்ட வங்கிக்கணக்கில் உள்ள அந்நிதி குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, அரபு நாட்டிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்டதாக நஜீப் பதிலளித்ததாக துன் மகாதீர் கூறியுள்ளார்.

அவ்வளவு பெரிய நன்கொடையைக் கொடுப்பதற்கு எந்த அரபு நாடு பைத்தியமாக உள்ளது? பில் கேட்ஸ் கூட அவ்வளவு பெரிய நிதியை வழங்க மாட்டார் என துன் மகாதீர் கூறியுள்ளார்.

Tags: People accumulated Mahathir campaign

<<RELATED MALAYSIA NEWS>>

*பிகேஆர் வெற்றிபெற்றால் சிலாங்கூரில் மறுபடியும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்..!

*பிரதமருக்கு எதிரான பொய்ப் பிரசார கையேடுகள் – புகார் அளித்த பாரிசான்