தனது செயலக அதிகாரிகளை பதவி நீக்கி கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0
653
tamilnews President orders interdict Chief Staff STC chairman

(tamilnews President orders interdict Chief Staff STC chairman)

ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானியான பேராசியர் I.H.K.மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் P.திசாநாயக்க ஆகியோர் மீது உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கி கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் பங்கு வர்த்தகம் தொடர்பில் 100 மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரி அதில் 20 மில்லியன் ரூபாவை முற்பணமாக பெற்ற போதே குறித்த இரண்டு ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் லஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் தற்போது அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு எதிராக எவ்வித தடைகளும் இல்லாமல் சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews President orders interdict Chief Staff STC chairman)

More Tamil News

Tamil News Group websites :