படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசேட விசாரணை ஆணைக்குழு வேண்டும்

0
588
tamilnews world media independent day sivajilingam request

(tamilnews world media independent day sivajilingam request)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசேட ஆணைக்குழுக்களை அமைத்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வதனூடாகவே ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியுமென வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியிலாளர்களின் நினைவுத் தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

போராட்ட காலங்களில் துணிச்சலாக ஊடகவியலாளர்கள் செய்திகளை கொண்டு சென்றிருந்தனர்.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பலர் கொல்லப்பட்டனர்.

அதே போன்று இறுதி யுத்தத்திலும் பல ஊடகவியிலாளர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இவ்வாறு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் லசந்த விக்கிரமதுங்க போன்ற தெற்கு ஊடகவியிலாளர்கள் சிலரது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அந்த விசாரணைகளும் முழுமை பெறாது இடைநடுவிலேயே நிற்கின்றன.

அதேநேரம், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியிலாளர்களின் விசாரணைகள் எவையும் ஆரம்பிக்கப்படாமலேயே
இருக்கின்றது.

ஆகவே, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள மேற்கொள்வதற்கு விசேட ஆணைக்குழுக்களை அரசாங்கம் அமைக்க வேண்டும்.

அவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பதனூடாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்..அதனூடாகவே ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியும்.

ஆகவே கொல்லப்பட்ட ஊடகவியிலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து காலம் தாழ்த்தாது நீதியை வழங்க வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை ஊடாக கோருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

(tamilnews world media independent day sivajilingam request)

More Tamil News

Tamil News Group websites :