இங்கிலாந்தில் விளையாடுகிறார் கோஹ்லி : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!

0
658
Surrey confirm Virat Kohli deal 2018

(Surrey confirm Virat Kohli deal 2018)

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே பிராந்திய அணிக்கு விளையாடுவது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது. இதனை முன்னிட்டு இங்கிலாந்து ஆடுகளங்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் கோஹ்லி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட தீர்மானித்துள்ளார்.

இவர் எதிர்வரும் ஜுன் மாதம் சர்ரே அணியுடன் இணைந்து விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கோஹ்லி சர்ரே அணிக்காகவும், சிட்டேஸ்வர் புஜாரா யோக்ஸையர், இசான் சர்மா மற்றும் வருன் ஆருண் சசெக்ஸ் மற்றும் லீசெஸ்டர்சையர் அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருமாதம் வரையில் போட்டிகளில் பங்கேற்கவுள்ள கோஹ்லி மிடுல்செக்ஸ் அணிக்கெதிரான ரோயல் லண்டன் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிறார்.

அதனைத் தொடர்ந்து கிளமோர்கன் மற்றும் ஹெம்சையர், சமரெஸ்ட் மற்றும் யோர்க்சையர் அணிகளுக்கெதிரான மூன்று சம்பியன்ஸிப் போட்டிகளிலும் கோஹ்லி பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணியில் இலங்கை அணியின் முன்னணி வீரர் குமார் சங்கக்கார விளையாடி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>