விராட் கோஹ்லியை பின்தள்ளிய சுரேஷ் ரெய்னா : முழுமையான விபரம் உள்ளே!

0
666
Suresh Raina vs Virat Kohli IPL news Tamil

(Suresh Raina vs Virat Kohli IPL news Tamil)

ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த விராட் கோஹ்லியை, சுரேஷ் ரெய்னா இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற மொத்த சீசன்களிலும் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா கைவசம் வைத்திருந்தார்.

எனினும் இம்முறை நடைபெற்ற போட்டிகளில் விராட் கோஹ்லி 349 ஓட்டங்களை விளாசி, சுரேஷ் ரெய்னாவை பிள்தள்ளினார். தற்போது நேற்று நடைபெற்ற போட்டியில் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரெய்னா இம்முறை மொத்தமாக 236 ஓட்டங்களை விளாசி, மீண்டும் முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளார்.

ஐ.பி.எல்.தொடரின் மொத்த சீசன்களின் அடிப்படையில் ரெய்னா 169 போட்டிகளில் விளையாடி 4776 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், விராட் கோஹ்லி 4767 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

விராட் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமானால் இன்னும் 9 ஓட்டங்களே தேவைப்படுகின்றது.

இதேவேளை கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி மற்றும் ரெய்னா விளையாடும் சென்னை அணி நாளைய தினம் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here