பிரபாகரனின் புகைப்பட அல்பம் முள்ளிவாய்க்காலில் கண்டெடுப்பு : 9 வருடங்கள் கடந்தும் அழியாத நிலையில்!

2
2843
prabhakaran photo album recovered mullivaikkal

(prabhakaran photo album recovered mullivaikkal)
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்று, இறுதிய யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கு இடையிலான இறுதி சமர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது பெண் போராளி ஒருவரினால் கைவிடப்பட்ட பிரபாகரனின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள போதும், குறித்த புகைப்படங்கள் அழிவடையாத நிலையில் இருந்துள்ளமை மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள குறித்த புகைப்பட அல்பத்தை பார்வையிடுவதில் மக்கள் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு நந்திக் கடலில் 2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அன்று நடந்த கடைசி 45 நிமிட யுத்தத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார்.

எனது தலைமையிலான 53 ஆவது டிவிசன்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு ஆகியோரை கொன்றது என்று முன்னாள் 53 ஆவது படை­ய­ணியின் கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் கமல் குண­ரட்ன தெரி­வித்திருந்தமை குறிப்பித்தக்கது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அண்டனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான யுத்தத்தில் மே 18 ஆம் திகதி உயிரிழந்தார். அதே நேரத்தில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்னவானார் என்பது எனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:prabhakaran photo album recovered mullivaikkal, prabhakaran photo album recovered mullivaikkal