பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் பேச தகுதியற்றவர்!

7
1086
Macron warned Attackers made angry Jean-Luc Mélenchon

பரிஸ் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.Macron warned Attackers made angry Jean-Luc Mélenchon

மே தினமன்று, பரிஸின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதோடு, காவல்துறையினரை தாக்கியும், பொதுச் சொத்துக்களை சேதமாக்கியும் உள்ளனர். மே 1 ஆம் திகதி நடந்த மே தினத்தை தொடர்ந்து, ஒரே நாளில் 200 பேர்கள்வரை கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளின் பின்னர், நேற்று மாலை வரை 40 பேர் வரை தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாக்கு விஜயம் மேற்கொண்ட மக்ரோன் அதனை முடித்துக்கொண்டு, நேற்று வியாழக்கிழமை Nouvelle-Calédonie பகுதிக்கு சென்றார். அங்கு வைத்து, பரிஸ் வன்முறைக்கு பெரிதும் கண்டனம் தெரிவித்தார். அதன் போது, ‘வெற்றி பெறும் போது மட்டும் ஜனநாயகத்தை நம்பும் அரசியல்வாதிகள் அனைவரும் இந்த வன்முறைக்கு கண்டனம் வெளியிட வேண்டும்.’ என மக்ரோன் குறிப்பிட்டார்.

அதேவேளை, தீவிர இடதுசாரி அரசியல் தலைவரான Jean-Luc Mélenchon, மக்ரோனின் இந்த பேச்சுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் வெளியிட்டார். அதில், ஜனாதிபதி மக்ரோன் என்னை தான் தாக்கியுள்ளார். இந்த பேச்சு தகுதியற்றதும், முறையற்றதுமாகும்!’ என அவர் தெரிவித்துள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**