இன்று!
விளம்பி வருடம், சித்திரை மாதம் 21ம் தேதி, ஷாபான் 17ம் தேதி,
4.5.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 11:17 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 10:38 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : முகூர்த்த நாள், மகாலட்சுமி வழிபாடு, அக்னி நட்சத்திரம் இரவு 8:03 மணிக்கு ஆரம்பம். .
மேஷ ராசி நேயர்களே !
சிலர் உங்களை குறை கூறலாம். தொழில், வியாபாரத்தில் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். லாபம் மிதமாக இருக்கும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.
ரிஷப ராசி நேயர்களே !
வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு.
மிதுனம் ராசி நேயர்களே !
சகோதரவழியில் உதவி கிடைக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் திருப்திகரமாக அமையும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
கடக ராசி நேயர்களே !
யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் படிப்படியாக உயரும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
சிம்ம ராசி நேயர்களே !
உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மிதமான பணவரவு இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.
கன்னி ராசி நேயர்களே !
முன்னர் செய்த உதவிக்கான பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அதிக பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
துலாம் ராசி நேயர்களே !
பிரச்னையை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
விருச்சிகம் ராசி நேயர்களே !
எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வளர்ச்சியால் கூடுதல் கவுரவம் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே !
முக்கிய பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு, சலுகை பெற்று மகிழ்வர். வாகனம் வாங்க யோகம் உண்டு. அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்
மகர ராசி நேயர்களே !
நண்பரின் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி தவிர்த்த மற்ற விஷயத்தில் ஈடுபட வேண்டாம். உடல் நலனில் அக்கறை தேவை.
கும்பம் ராசி நேயர்களே !
எதிலும் முன்யோசனை தேவை. தொழில் வியாபாரம் மந்தநிலையில் இருக்கும். லாபம் சுமார். பணியாளர்கள் விண்ணப்பி்தத கடனுதவி கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்கலாம்.
மீனம் ராசி நேயர்களே !
பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிக்கல்களை உடனே சரி செய்யவும். லாபம் சுமார். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது.
மேலும் பல சோதிட தகவல்கள்
- சனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா ??
- விளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018
- சிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!
- மாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….!
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்