லொரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவன் பரிதாபமாக பலி

0
1022
motor cycle three wheel accident one men dead anuradhapuura

(Lorry, motorcycle collision accident 12 year old boy killed)
கண்டி – மஹியங்கனை வீதியில் தெல்தெனிய வேகல பிரதேசத்தில் லொரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரும் பின்னால் அமர்ந்து சென்ற சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் மஹியங்கனை மாபாகடவௌ பகுதியை சேர்ந்தவர் என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Lorry, motorcycle collision accident 12 year old boy killed