இந்தியருக்கு துபாயில் காத்திருந்த அதிஷ்டம்!

0
697
Jackpot lottery draw Dubai Indian won nearly 12 crore

(Jackpot lottery draw Dubai Indian won nearly 12 crore)

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது மகன் கேரளாவில் கல்லூரி படித்து வருகிறான்.

அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை அனில் வாங்கி இருந்தார். தனது மகனின் பிறந்தநாளை வைத்து 11197 என்ற எண்ணுடைய லாட்டரி சீட்டை அவர் வாங்கி இருந்தார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 70 லட்சம் திர்ஹம்கள் கிடைத்துள்ளது. இதுதவிர மேலும் ஐந்து இந்தியர்களுக்கு தலா ஒரு லட்சம் திர்ஹம் பரிசு விழுந்துள்ளது.

இந்த தொகையை வைத்து என்ன செய்வது என இனிதான் யோசனை செய்ய இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர்தெரிவித்ததாவது :-

என் மகனே எனது அதிர்ஷ்டம். அந்த டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கினேன். என் மகனின் பிறந்த தேதி 11/97 என்பதால், 11197 என்ற எண்ணை தேர்ந்தெடுத்தேன். பிக் டிக்கெட் மூலம் எனது அதிர்ஷ்டத்தை சோதிப்பது இது இரண்டாவது முறை. நான் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையை இன்னும் நம்ப முடியவில்லை. சமீபத்தில் எனக்கு பல பிரச்சனைகள் வந்தது. அது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பரிசுத்தொகையை வைத்து என்ன செய்ய வேண்டும் என இனிதான் யோசனை செய்ய வேண்டும்.என கூறினார்.

(Jackpot lottery draw Dubai Indian won nearly 12 crore)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

  •  Tamil News Group websites :