இராணுவ வீரர் தினம் யாழ்ப்பாணத்தில்

0
709
Heroses day jaffna

(Heroses day jaffna)
இராணுவ வீரர்கள் தினம் இன்று யாழ்ப்பாணம் பலாலி கட்டளைத் தலைமையகத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் இடம்பெற்றுள்ளது.

பலாலி கட்டளைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு விருந்தினராக இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா பொன்சேகா கலந்து கொண்டிருந்தார். அத்துடன், பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்துகொண்டார்.

இதன்போது, இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு முப்படையினரினால் மரியாதை செலுத்தப்பட்டதுடன், பிரதம அதிதிகளினால் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்வ மத வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றதுடன் முப்படை வீரர்கள் நினைவாக நூல் மற்றும் கொடி என்பனவும் வெளியிடப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்தினாதன், யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன், சர்வ மத தலைவர்கள். யாழ். மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள், பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Heroses day jaffna