{ Election C announce postal votes }
மலேசியா, நாடு தழுவிய நிலையிலுள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் அஞ்சல் வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை, அஞ்சல் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருப்பது ‘ஆபத்து’ என்று அக்கட்சித் தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா கூறினார் என்று நூருல் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் நாளுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தி கடந்த பொதுத் தேர்தலின் போது, 30 நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்தார்கள்.
தேர்தலின் போது கோப்பெங் நாடாளுமன்ற தொகுதியில் திடீரென்று 40 தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டதாக வேட்பாளர்கள் சிலர் எங்களிடம் தெரிவித்தனர்” என்று அவர் கூறியுள்ளார். தென் செபராங் பிறை அஞ்சல் வாக்குகள் அலுவலகத்தை இன்று நூருல் பார்வையிட்டுள்ளார்.
இதனிடையில், பொதுத் தேர்தலால் மக்களின் ஒற்றுமை பிளவு பட்டுவிடக் கூடாது என்றும், அதன் அடிப்படையில், சமுதாய ஒற்றுமையை உணர்த்தும் மையமாக மசூதிகள் செயல்பட வேண்டும் என்று நூருல் கூறியுள்ளார்.
கிழற்கு கடற்கரை ரயில் இணைப்பு சேவையால், மலேசியர்கள் எவ்வகையில் நன்மை அடைவர்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அந்த ரயில் இணைப்பு சேவையின் ஆரம்பக் கட்ட செலவு ரிம.27 பில்லியன். அந்தச் சேவையை வழங்க கிட்டத்தட்ட ரிம.55 பில்லியனிலிருந்து ரிம.60 பில்லியன் வரை செலவு செய்ய வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
Tags: Election C announce postal votes
<< TODAY RELATED MALAYSIA NEWS>>
*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!
*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!
*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!