பிரான்ஸில், இனி மின்சார துவிச்சக்கர வண்டிகள் பாவனையில் இருக்காது!

0
700
eBike services stop Paris

இவ்வருட ஆரம்பத்தில் Vélib வாடகை துவிச்சக்கர வண்டி சேவைகள் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் போதிய தரிப்பிடங்கள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் ஐந்து மாதங்கள் ஆன நிலையில், இந்த சேவைகள் முற்றுப்பெறாமலும் உள்ளது. இதனால் பல பயனர்கள் தங்கள் சந்தா சேவையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கு பரிஸ் நகர முதல்வர், உடனடி தீர்வு ஒன்றை கோரியிருந்தமை நாம் அறிந்ததே. இது குறித்த செய்தியினை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்தோம். eBike services stop Paris

தற்போது, புதிய நிறுவனமான Smovengo, நகர மண்டப கோரிக்கைக்கு செவி சாய்த்து, புதிய அவசர திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. eBike என அழைக்கப்படும் மின்சார தானியங்கி துவிச்சக்கர வண்டிகள் அமைக்கும் பணியை நிறுத்த உள்ளதாகவும், அதற்கு பதிலாக சாதாரண சைக்கிள் நிலையங்களை முற்று முழுதாக அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

eBike வண்டிகளுக்கான மின் தேவைகள் அதிகம் இருப்பதால், முன்னர் இருந்த நிலையங்களை அகற்றி புதிய நிலையங்கள் அமைத்து வந்தனர். இந்நிலையில் அந்த திட்டத்தை கைவிட்டு, வரும் ஜூன் மாதத்துக்குள் 800 துவிச்சக்கர வண்டி தரிப்பிடங்களை அமைத்து திட்டத்தை முடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கு பின்னர், சேவைகள் இயங்க ஆரம்பித்ததும், eBike சேவைகளுக்கான விஸ்தரிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**