(Dinesh Karthik vs Chennai Super Kings 2018)
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்ட தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.
இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தங்களது அணி வீரர்களின் செயற்பாடு குறித்து அணித் தலைவர் தினேஸ் கார்த்திக் கருத்து வெளியிட்டுள்ளார்.
“அனைத்து புகழும் அணி நிர்வாகத்திற்கே போய் சேரவேண்டும். இந்திய 19 வயதுக்குற்பட்ட அணியின் வீரர்களை அணிக்கு பெற்று தந்துள்ளனர். அனைவரிடமும் சிறப்பான திறமைகள் உள்ளன. அதிலும் சுப்மான் கில் ஒரு சிறந்த இளம் வீரர்.
சுப்மான் கில்லுக்கு நான் மேலதிக அழுத்தங்களை கொடுக்க விரும்பவில்லை. அவருடைய ஆட்டத்தை விளையாடுமாறு கூறியுள்ளேன். இந்திய அணிக்காக சுப்மான் நீண்ட நாட்களுக்கு விளையாட வேண்டும்” என்றார்.
அத்துடன் “எமக்கு கிடைத்துள்ள முக்கிய வீரர்களில் சுனில் நரைன் மறுக்க முடியா திறமை உள்ளவர். போட்டியின் ஆரம்பத்திலும், இறுதிக்கட்டத்திலும் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியை மிரட்டி வருகின்றார்.
அதுமாத்திரமின்றி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அணியின் ஓட்ட இலக்கை உயர்த்துவதுடன், சகல பக்கங்களிலும் அணியின் வெற்றிக்கு உதவுகிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
<<Tamil News Group websites>>