அபாயாவின் எதிரி அயூப் அஸ்மின்; யாழில் மீண்டும் சர்ச்சை

7
7507

(Abaya affair Muslims protest Jaffna)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ். மாவட்ட முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகானந்தா மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்வது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் பெண்கள் சேலையே அணிந்து செல்ல வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு ஆதரவாக வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ். முஸ்லிம் மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் நண்பகல் அவர்களது ஜூம்மா தொழுகை நிறைவடைந்த பின்னர் யாழ். பச்சைபள்ளிக்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், அஸ்மீனது உருவ பொம்பையையும் தீயிட்டும் கொழுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 100 மேற்பட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அற்ப அரசியலுக்காக ஆபாசத்தை ஆதரிக்காதே, அயூப் அஸ்மினே முஸ்லிம் பெண்களின் ஆடை குறைப்பிலா உமது பதவி உயர்வு தங்கியுள்ளது, அபாயாவின் எதிர் அயூப் அஸ்மின் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினின் உருவப் பொம்மைக்கு செருப்பிலான மாலை அணிவித்தமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Abaya affair Muslims protest Jaffna

7 COMMENTS

  1. You have made some good points there. I checked on the web for more info
    about the issue and found most individuals will go along with
    your views on this website.

  2. What’s up to every body, it’s my first go to see of
    this blog; this webpage contains amazing and really fine information designed for visitors.

  3. แจกสูตรสล็อตXO วิธีเล่นเกมสล็อตออนไลน์แบบใหม่ 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here