தினசரி 5 முறை உடலுறவு: பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை

0
3604

Tadcaster Woman Five Times

தினசரி பாலுறவுக்கு அடிமையான பெண்ணொருவர் , இப்பழக்கம் தன் வாழ்க்கையை எவ்வாறு சீரழித்தது என்பது தொடர்பில் வெளியுலகிற்கு கூறியுள்ளார்.

டெட்காஸ்டரைச் சேர்ந்த குறித்த பெண், தான் சிலவேளைகளில் நாளொன்றுக்கு 5 தடவை உறவு வைத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து தடவையும் தனக்கு சில வேளைகளில் போதாமல் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினசரி காலையில் இதே நினைப்புடனேயே எழும்பியதாகவும், இப்பழக்கம் தன்னை பெரும் அவமானத்திற்கு உள்ளாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 37 வயதான அவர் , தனது காதலனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

ஆரம்பத்தில் தனது பழக்கத்தை காதலன் விரும்பிய போதிலும், பின்னர் தன்மீது சந்தேகப்படத்தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் பிரான்ஸில் அவரது தாயுடன் வாழ்ந்து வருகின்றார்.

தனக்கு 3 ஆவது குழந்தை பிறந்த பின்னர் , மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், அதன்பின்னரே இப்படி உடலுறவுக்கு அடிமையானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வரும் அவர், பாலுறவுக்கு அடிமையான எவரும் இருந்தால், உடனே மருத்துவ உதவியை நாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.