பயணிகளுக்கு தலைவலி இன்றும் தொடரும்!

0
1043
SNCF Rail strike May 3

பிரஞ்சு ரயில்வே ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தால், பிரான்ஸில் பயணிகள் வியாழனன்று அதிக பயணத் தலைவலிகளை சந்திப்பர். ஆனாலும் தொழில்துறை நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்தில் வேலைநிறுத்தங்கள் தொடங்கியபோது இருந்ததைவிட மிகக் குறைவு.SNCF Rail strike May 3

SNCF தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களால் நாடு முழுவதுமான ரயில் நேர அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் இன்னல்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

ஈஸ்ட் லைனில் ஐந்து TGV ரயில்களில் மூன்று TGV ரயில்களும், அட்லாண்டிக் வரிசையில் இரண்டு TGVகளில் ஒரு TGV யும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒவ்வொரு மூன்று TGV ரயில்களில் ஒரு TGV நோர்ட சேவையும், இரண்டு TGV Sud-Est சேவைகளில் ஒரு TGV சேவையும் இயங்கும்.

Ouigo சேவையில் 5 ரயில்களில், 3 ரயில்களும் சேவையில் ஈடுபடும்.

சர்வதேச சேவைகளில், ஐந்து ரயில்களில் மூன்று ரயில்களும், யூரோஸ்டார் மற்றும் லைரியா சேவைகளில் ஐந்து ரயில்களில் நான்கு ரயில்களும் சேவையில் ஈடுபடும்.

மேலும், பிராந்திய சேவைகள் பாதிக்கப்படும் என்றும் SNCF மேலும் தெரிவித்துள்ளது. ரயில்வே நடவடிக்கைகள் எவ்வாறு தங்கள் பகுதிகளை பாதிக்கின்றன என்பதை வலைத்தளத்தில் பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**