புலிகள் தயாரித்த கைக்குண்டுகள் மீட்பு

0
647
Ltte manufactured hand bomb recovered

(Ltte manufactured hand bomb recovered)

கிளிநொச்சி கண்டாவலை பிரதேசத்தில், யுத்தக் காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட வித்தியாசமான இரண்டு கைக்குண்டுகள் கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 28 ஆம் திகதி ​மேற்படி கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளன.

யுத்தக்காலத்தில் கண்டாவலை பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தப்போது, இந்த இரண்டு கைக்குண்டுகளும் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags:Ltte manufactured hand bomb recovered, Ltte manufactured hand bomb recovered