உலக பதினொருவர் அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்!!!

0
2011
Hardik pandya Dinesh Karthik represent ICC World XI

(Hardik pandya Dinesh Karthik represent ICC World XI)

இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 போட்டியொன்று நடைபெறவுள்ளது.

கரீபியன் தீவுகளில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதி திரட்டும் முகமாக இந்த போட்டித் தொடர் இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான உலக பதினொருவர் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் இரு இந்திய வீரர்கள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் இளம் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் விக்கட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர் தினேஸ் கார்த்திக் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அணியில் இணைவதை இங்கிலாந்து தொழில் அதிபர் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நிர்வாகி கில்ஸ் கிளார்க் உறுதிசெய்துள்ளார்.

உலக பதினொருவர் அணியின் தலைவராக இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சயிட் அப்ரிடி, சொயிப் மலிக், சகிப் அல் ஹசன், தமிம் இக்பால், திசர பேரேரா மற்றும் ரஷீட் கான் ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>