ஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் பிரான்ஸ்!

7
967
France say ban Iran Nuclear weapons programs

அணு ஆயுதத் திட்டங்களை நிறைவேற்றி வரும் ஈரான் நாட்டுடன், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷியா, சீனா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை கடந்த 2015ஆம் ஆண்டு செய்துகொண்டன.France say ban Iran Nuclear weapons programs
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. அத்துடன், இந்த ஒப்பந்தமே பைத்தியக்காரத்தனமானது என்றும், ஈரான் நாட்டுடனான அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றிலே மிக மோசமானது என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செயற்படுத்தவில்லை, அந்த நாடு ரகசியமாக அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ முன்வைத்தார்.

மேலும் “ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது” என்று கூறினார்.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை ரகசியமாக தொடர்ந்துள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார். இதனைத் தொடர்ந்து, ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாக்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2015-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து மே 12-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன முடிவு எடுப்பார் என்பது பற்றி எனக்குத் தெரியாது, எனத் தெரிவித்தார்.

அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றும் ஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் விதமாக ஒரு சிறந்த முடிவை அவர் எடுப்பார் என நம்புகிறேன். மேலும், பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்து மே தினத்தன்று பரிஸில் வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” எனவும் கூறினார்.

மேலும், ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் டிரம்ப் தொடர வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**