(delhi daredevils vs rajasthan royals match news Tamil)
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்நோக்கி, டெல்லி அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை டெல்லி அணிக்கு வழங்கியது.
எனினும் நாணய சுழற்சியின் பின்னர் மழை குறுக்கிட்டதால், அணிக்கு 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கொலின் மன்ரோ ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க, சிரேயாஷ் ஐயர் மற்றும் பிரிதிவ் ஷாவ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர்.
பிரிதிவ் ஷாவ் 47 ஓட்டங்களையும், சிரேயாஷ் ஐயர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ரிஷவ் பாண்ட் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 29 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி 17.1 ஓவர்களில் மீண்டும் மழை குறுக்கிட, டெல்லி அணி 6 விக்கட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
மழை ஓய்ந்த பின்னர் டக்வர்த் லிவிஸ் முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 12 ஓவர்களுக்கு 151 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும், ராஜஸ்தான் அணி 12 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 26 பந்துகளுக்கு 67 ஓட்டங்களையும், ஷோர்ட் 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
டெல்லி அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில் ட்ரென்ட் போல்ட் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் நிறைவில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், ராஜஸ்தான் அணி 7வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய போட்டியில் மொத்தமாக 25 சிக்ஸர்களும் விளாசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- கோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை!
- கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு! (காணொளி இணைப்பு)
- அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்!!!
- சென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள்? : இதை கொஞ்சம் படிங்க!!!
<<Tamil News Group websites>>