இன்றைய ராசி பலன் 03-05-2018

3
1319
http://sothidam.com/2018/05/03/today-horoscope-03-05-2018/

(Today horoscope 03-05-2018)

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 20ம் தேதி, ஷாபான் 16ம் தேதி,
3.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி காலை 9:36 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 8:11 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30 -12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00 -7:30 மணி
* குளிகை : காலை 9:00 – 10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
பொது : சங்கடஹர சதுர்த்தி, விநாயகர், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். நீண்டநாளைய எண்ணம் ஒன்று நிறைவேறும்.

ரிஷப ராசி நேயர்களே !
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

மிதுனம் ராசி நேயர்களே !
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

கடக ராசி நேயர்களே !
வசந்தகாலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச் செலவுகள் கூடும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

சிம்ம ராசி நேயர்களே !
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தினால் ஆரோக்கியத்தைச் சீராக்கும்.

கன்னி ராசி நேயர்களே !
கனவுகள் நனவாகும் நாள். தொட்டகாரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும்.

துலாம் ராசி நேயர்களே !
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

தனுசு ராசி நேயர்களே !
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வங்கிச்சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வந்து சேரலாம்.

மகர ராசி நேயர்களே !
நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். உடன் பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

கும்பம் ராசி நேயர்களே !
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம் ராசி நேயர்களே !
இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 03-05-2018