உடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்

0
11603
Zoe Adams murder trial

Zoe Adams murder trial

தனது காதலனோடு உறவுகொள்ளும் போது, அவரை  கத்தியால் குத்திய பெண்ணுக்கு, இங்கிலாந்து நீதிமன்றமொன்று 11 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

சோய் அடம்ஸ், என்ற 19 வயதான யுவதிக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனது காதலனை உறவுக்கு அழைத்துள்ள அவர், முதலில் அவரது முகத்தை தலையணையால் மூடியே கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது சோய், கோமாளி போல் வேடமிட்டிருந்ததாக அவரது காதலர் தெரிவித்துள்ளார்.

முதலில் தனது கையை கட்டிலில் கட்டவா ? என, சோய் கேட்டதாக அவரது காதலன் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, தலையணையால் முகத்தை மூடிய நிலையில், கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளார். குத்திய உடன் தனக்கு வலி தெரியவில்லை என அவரது காதலன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இரத்தம் வர ஆரம்பிக்கவே, தான் தலையணையை அகற்றி, காதலியை பார்த்ததாகவும், இதன்போது அவர் தனது இதயத்தை பார்த்துக்கொண்டிருந்ததாக, சோயின் காதலன் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தான் ஒருவாறு அங்கிருந்து தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவத்துக்கு முன்னர், சோய், கஞ்சா மற்றும் மதுபானம் பாவித்ததாக, அவரது காதலன் தெரிவித்துள்ளார்.

மேலும் சோய், கொலை மற்றும் ஆண் பலியிடல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர் என அவரது காதலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையின் போது , சோய் தான் அவ்வாறு செய்தமையை மறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

எனினும் அவரது காதலன் கூறுவதில் உண்மையுள்ளமையை கண்டறிந்த நீதிபதி சோய்க்கு 11 ஆண்டு கால சிறைத்தண்டனையை விதித்துள்ளார்.