கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

0
1345
Three suspects arrested

(Three suspects arrested with Kerala Ganja)
தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை, ஒலிரூட் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் ஒருவர் விற்பனை செய்பவர் என்றும் ஏனைய இருவரும் கஞ்சாவை வாங்கச் சென்றவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார், நுவரெலியா நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Three suspects arrested with Kerala Ganja