இன்று இலங்கை முழுவதும் துக்க தினம் அனுஸ்டிப்பு

0
1044
tamilnewsGovt declares day mourning Dr Lester James Peiris

(tamilnewsGovt declares day mourning Dr Lester James Peiris)

காலஞ்சென்ற கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்ஸினால் இலங்கை சினிமாவுக்கு ஆற்றப்பட்ட அளப்பரிய அர்ப்பணிப்புகளை கௌரவிக்கும் முகமாக இன்றைய தினம் (02) நாடளாவிய ரீதியாக துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் தேகம் இன்றைய தினம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அவரது பூதவுடல் உடல் தற்போது திஸ்ஸமகாராமவிலுள்ள லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸ் மாவத்தையில் உள்ள 24 ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இறுதிக்கிரியைகள் இன்று மாலை 6 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச அனுசரணையுடன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnewsGovt declares day mourning Dr Lester James Peiris)

More Tamil News

Time Tamil News Group websites :