நாடுகடத்தப்படும் சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள இலங்கை அகதிகள்

0
711
tamilnews Tamil couple faced deportation Australia decision today

(tamilnews Tamil couple faced deportation Australia decision today)

அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

அகதிகள் தொடர்பான ஆணையகம் மெல்பர்ன் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான தீர்ப்பு இன்று (02) புதன்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தம்பதிகளான நடேசலிங்கம் மற்றும் பிரியா அவர்களின் அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 வாரங்களுக்கு முன்னர் குறித்த இலங்கை அகதிகள் பிலோயெலா பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதன் விளைவாக அவர்களை நாடுகடத்த தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் அகதிகள் ஆணையகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களின் நாடுகடத்தலை தடுக்கும் முகமாக மாற்றுவழிகளில் தாம் முயற்சித்துவருவதாகவும் அவர் ஊடகங்களிடம் கூறினார்.

அண்மைக்கால விதிமுறைகளுக்கு அமைவாக பெறும்பாலான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான உறவுமுறைகளுக்கு அமைவாக படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அகதிகளை மீள வரவழைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக ஈரான் உள்ளிட்ட நாடுகளும் இந்த வழிமுறைகளை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews Tamil couple faced deportation Australia decision today)

More Tamil News

Time Tamil News Group websites :