கடன் திட்டமா? தற்கொலை திட்டமா? நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

0
1149
Social activists warn micro financial institutions Jaffna

(Social activists warn micro financial institutions Jaffna)
யாழ்ப்பாணம் பொன்னாலைப் பிரதேசத்தில் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு சமூகச் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை மீறி கடன் வழங்க முற்படும் நிதி நிறுவனங்களின் பணியாளர்கள் அப்பகுதியில் இருந்து வலிந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை பகுதியில் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ள போதிலும் நுண்நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் கடன்களை வழங்கி வருகின்றனர்.

எனவே, இந்த நிறுவனங்கள் வழங்கிய கடன்களை மென்போக்கான அடிப்படையில் மீள அறவிட வேண்டும். இதனை விடுத்துப் புதியவர்களுக்குக் கடன் வழங்க முற்பட்டால் அவர்களை வலிந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுமெனவும் குறித்த சமூகச் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Social activists warn micro financial institutions Jaffna