நடப்பு சம்பியனுக்கு வந்த சோதனை!!! : வெளியேற்றத்தின் உச்சத்தில் மும்பை!!!

0
723
royal challengers bangalore beat Mumbai Indians 2018

(royal challengers bangalore beat Mumbai Indians 2018)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முக்கியமான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி, மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி ஆடிய பெங்களூர் அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் ஓட்டங்களை குவித்த நிலையில், கொலின் கிராண்டோமின் இறுதி ஓவரின் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பெங்களூர் அணிசார்பில் மனன் வோஹ்ரா 45 ஓட்டங்களையும், மெக்கலம் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, கிராண்டோம் 10 பந்துகளுக்கு 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மும்பை அணிசார்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி ஆரம்பத்திலிருந்து விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்களையும், டுமினி மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் தலா 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தீம் சௌதி, உமேஷ் யாதவ் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ள மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று, தொடரின் தோல்வி பாதையை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது. இனிமேலும் மும்பை அணி வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால், ஏனைய அணிகளின் போட்டிகளின் வெற்றியின் அடிப்படையிலேயே முன்னேற வாய்ப்புண்டு.

எனினும் நேற்றைய போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்து, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்படி பெங்களூர் அணியின் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

<<Tamil News Group websites>>