மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று

0
715
Mahinda led joint opposition main meeting today tamil news

(Mahinda led joint opposition main meeting today tamil news)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இன்று மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலியில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

(Mahinda led joint opposition main meeting today tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :