(lumiwatch projector smartwatch 2d finger tracking)
தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச் (Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் (Carnegie Mellon University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லுமிவாட்ச்சை உருவாக்கியுள்ளனர். இதில் சிறிய ரக புரொஜக்டர் இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றை கையின் மீது படும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கையையே தொடு திரையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்மார்ட் வாட்ச்சில் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்து, மொபைலில் பார்க்கும் அனைத்தும் அம்சங்களையும் கையில் பார்த்து விடலாம். ஸ்மார்ட்வாட்ச்சில் இடம்பெற்றுள்ள சென்சார், உடலை தொடுதிரையாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இதில் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம் செயல்படுகிறது.
ப்ளூடூத், வைஃபை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குவால்கம் 1.2 GHz குவாட்கோர் பிராசசர், 768 எம்பி ரேம், 4GB உள்ளடக்க சேமிப்பு வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
OUR GROUP SITES