இந்தியாவுக்கு பின்னடைவு! : இலங்கையை முந்தியது ஆப்கானிஸ்தான்!!!

0
867
ICC Annual one-day Ranking news Tamil

(ICC Annual one-day Ranking news Tamil)

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடமும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 தரப்படுத்தலின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு வருகின்றது.

நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் தரப்படுத்தலை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலின் முதலிடத்தை இந்திய அணியை பின்தள்ளி இங்கிலாந்து அணி பிடித்துள்ளது.

கடந்த வெளியீட்டில் முதலிடத்தை பிடித்திருந்த இந்திய அணி ஒரு புள்ளியினை இழந்து இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் அதிகம் பெற்று 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனையடுத்து ஒரு புள்ளிகள் குறைந்து 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து 4 புள்ளிகள் குறைவடைந்து 113 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்தையும், 112 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி 4வது இடத்தையும், 104 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்ச்சியாக 6வது இடத்தை பாகிஸ்தான், 7வது இடத்தை பங்களாதேஷ் மற்றும் 8வது இடத்தை இலங்கை அணிகள் பிடித்துள்ளதுடன், 9ம், 10, மற்றும் 11வது இடங்களை முறையே மே.தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பிடித்துள்ளன.

இதேவேளை இன்றைய தினம் இருபதுக்கு-20 தரவரிசை பட்டியலையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தை பாகிஸ்தான் அணி பிடித்துள்ளதுடன்,  இரண்டாவது இடத்தை அவுஸ்திரேலிய அணியும், மூன்றாவது இடத்தை இந்திய அணியும் பிடித்துள்ளது.

குறித்த பட்டியலில் இலங்கை அணி முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியை விட பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் 8வது இடத்தையும், இலங்கை அணி 9வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<Tamil News Group websites>>

ICC Annual one-day Ranking news Tamil, ICC Annual one-day Ranking news Tamil,ICC Annual one-day Ranking news Tamil