ஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்

0
1328
Appointment 20 thousand graduates July

(Appointment 20 thousand graduates July)
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளதாவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதனிடையே, இரண்டு வருடங்களாக காணப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

20,000 பட்டதாரிகள் ஒரு வருட பயிற்சியின் பின்னர் நிரந்தர சேவையாளர்களாக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 20,000 ரூபா ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் 57,000 வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் பங்கேற்றுள்ளனர்.

எனினும் இவர்களில் அரச சேவைக்கு தெரிவு செய்யப்படாத ஏனையவர்களையும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Appointment 20 thousand graduates July