(Guard shot drone flying palace Saudi)
சவுதி அரசர் இருக்கும் பகுதியான ”ராயல் பேலஸில்” பறந்த ஆள் இல்லா சிறிய ரக டிரோன் விமானம் ஒன்று, அந்நாட்டு பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது. நேற்று இரவு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
ராயல் பேலஸின் அருகிலேயே அந்த விமானம் நீண்ட நேரம் சுற்றி இருக்கிறது. பாதுகாப்பு படையின் துரிதமான நடவடிக்கையால் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. தற்போது இந்த பிரச்சனை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது
அந்த டிரோன் சரியாக 20 நிமிடம், ராயல் பேலஸின் மேல் பகுதியில் சுற்றுயுள்ளது. அங்கு இருப்பவர்களை வேவு பார்த்தது போல சுற்றி இருக்கிறது. இது பறக்கும் சத்தம் கேட்காத அளவிற்கு சுற்றியதன் காரணத்தால், முதலில் அதன் இடத்தையே பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடைசியாக பாதுகாப்பு படை அந்த டிரோனை கண்டுபிடித்தது. பின் அதை நோக்கி 5 க்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். சமயங்களில் அந்த டிரோன் குண்டுகளில் இருந்து விலகியது உள்ளது. 30 நொடி துப்பாக்கி சூட்டிற்கு பின் அந்த டிரோன் வீழ்த்தப்பட்டது.
இதையடுத்து அந்த கட்டிடத்திற்குள் இருந்த சவுதி மன்னர் சல்மான் உடனடியாக வெளியேறினார். பங்கர் உதவியுடன் முதலில் பதுங்கி பாதுகாப்பாக இருந்த அவர், பின் கடும் பாதுகாப்பு வசதியுடன் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இன்னும், ராயல் பேலஸ் அழைத்து வரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
(Guard shot drone flying palace Saudi)
Tamil News Groups Websites