ஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் ?

0
1131
officers bad think not like give minority people several division rauf hakeem

(Government’s secret deal Hakeem rishadand Mano)
அமைச்சரவை மறுசீமைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோருடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்துள்ளது. இந்த ரகசிய ஒப்பந்தத்தை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்னர் அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் இரண்டும் சிறுபான்மைக் கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய இணக்கப்பாட்டு உடன்படிக்கை குறித்து உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் புதிய பங்காளிக் கட்சிகளுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை எதுவென்பதை, இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முற்போக்கு கூட்டணி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவற்றுடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்துக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்க்கமாட்டாது என்றும், பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Government’s secret deal Hakeem rishadand Mano, Government’s secret deal Hakeem rishadand Mano

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here