(biggest party minister Southern Province)
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் தலையிடி தீர்ந்து விட்டதாகக் கூறி, தென் மாகாணத்திலுள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டில் பெரியளவிலான விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்கள் பலருக்கு அமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டன.
இந்த நிலையில், தனது அமைச்சின் அமைச்சரை மாற்றியதற்கு மகிழ்ச்சியை கொண்டாடும் முகமாக தென் பகுதியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெருந்தொகையான பணம் செலவு செய்து விலை உயர்ந்த மதுபானத்துடன் தனது நண்பர்களுக்கு விருந்தொன்றை ஒழுங்கு செய்துள்ளார்.
கடந்த மூன்று வருட காலமாக இந்த அமைச்சரினால் தனக்கு மக்களுக்கு சேவை செய்வதற்கு இடமளிக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சரான தனக்கு அமைச்சில் பணிபுரிய எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை எனவும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பல தடவை முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, குறித்த அமைச்சருக்கு வேறொரு அமைச்சு பதவி வழங்கப்பட்டதனை அடுத்து, குறித்த இராஜாங்க அமைச்சர் பாரிய விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- முள்ளிவாய்கால் தழிழினத்தின் விடுதலைக்காக தீக்குளித்த மண்
- கண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
- இப்படியும் ஒரு கொடுமையா? ஒரே நாளில் 19 பேர் பலி
- கடன் திட்டமா? தற்கொலை திட்டமா? நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
- கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்
- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags; biggest party minister Southern Province