அப்பா நான் செத்த பின்னராவது குடிக்காமல் இரு ; ஆவியாக வருவேன்

0
4023
17 year old student suicide

(17 year old student suicide)
நெல்லை சங்கரன்கோவில் பகுதியில் தனது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதனால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

17 வயதுடைய மாணவன் மனதை நெகிழ வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, புகையிரத மேம்பாலத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சங்கரன்கோவில் அருகிலுள்ள குருக்கள்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது 17 வயதுடை மகன் தினேஷ் நல்லசிவன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகிலுள்ள புகையிரத மேம்பாலத்தில் இன்று காலை தினேஷ் நல்லசிவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தை தொடர்த்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், குறித்த மாணவனின் சடலத்தை மீட்டதுடன், விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது, மாணவன் தினேஷின் ஆடையில் இருந்து கடிதமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் தன்னுடைய இறப்புக்கு பின்னராவது எனது தந்தை குடிக்கக்கூடாது என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

‘என் இறப்புக்குப் பிறகாவது நீ (தந்தை) குடிக்காமல் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. எனக்கு நீ கொள்ளி வைக்கக்கூடாது. காரியம் செய்யக்கூடாது. மொட்டை போடக் கூடாது.

மணியின் தந்தை தான் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும். இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் இனிமேலாவது மதுக்கடைகளை அடைக்கிறார்களா? என பார்ப்போம். இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை அடைப்பேன்’ எனக் குறித்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைக் கைப்பற்றிய பொலிஸார் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தினேஷின் சிறுவயதிலேயே அவரது தாய் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் அவரது தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.

10 ஆம் வகுப்பு வரை தினேஷ் மதுரையிலுள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், தந்தை வீட்டுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வந்ததாகவும், அப்போது தன் தந்தை மது அருந்துவதால் தினேஷ் மனமுடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தினேஷ் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பாளையங்கோட்டை அருகேயுள்ள புகையிரத மேம்பாலத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; 17 year old student suicide