இன்றைய ராசி பலன் 01-05-2018

0
1684
Shilpa Shetty bikini pose viral tamil latest gossip

(Today horoscope 01-05-2018)

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 18ம் தேதி, ஷாபான் 14ம் தேதி,
1.5.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி காலை 7:17 வரை;
அதன் பின் துவிதியை திதி, விசாகம் நட்சத்திரம் மாலை 4:24 வரை;
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவீர்கள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும். சேமிப்பு உயரும்.

ரிஷப ராசி நேயர்களே !
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப பொறுப்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி வந்து சேரும்.

மிதுனம் ராசி நேயர்களே !
சுகங்களும், சந்தோ‌ஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக வெளியூர்ப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பொன்–பொருள் சேர்க்கை உண்டு.

கடக ராசி நேயர்களே !
வருங்கால நலன் கருதி திட்டம் தீட்டும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே !
புது முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே !
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வாங்கல்– கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி நேயர்களே !
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைபேசி வழியில் ஆச்சர்யப்படத்தக்க செய்தி வந்து சேரும். நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவர். கல்யாணப் பேச்சுகள் கைகூடும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
வசதிகள் பெருகும் நாள். வரவு திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே !
எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் ஏற்படலாம். வாகனமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே !
சலுகைகள் கிடைத்து சந்தோ‌ஷம் ஏற்படும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

மீனம் ராசி நேயர்களே !
எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதர பாசம் கூடும். அலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 01-05-2018