தமிழ் வர்த்தகர் தீ மூட்டித் தற்கொலை: புத்தளத்தில் சோகம்!!

0
1981
tamil businessman commits suicide set fire puttalam

(tamil businessman commits suicide set fire puttalam )
கடனை திரும்பச் செலுத்த முடியாமல் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட நபர் ஒருவரின் சடலம் புத்தளம் – உடப்பு – கீரியன்கல்லிய பகுதியில் பாழடைந்த காணியொன்றில் இருந்து எரியுண்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதான பெரியவெள்ளையன் அருள்முருகன் உடப்பு நகரில் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தகர் காணாமல் போயிருந்ததாக உறவினர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிலையில் குறித்த நபரின் சடலம் எரியுண்ட நிலையில் கீரியன்கல்லிய பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலத்தின் அருகிலிருந்து மீட்கப்பட்ட பணப் பையில் கடிதம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும், அதில் கடன் தொல்லை காரணமாக தான் மன உளைச்சலில் இருந்ததாக எழுதப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் வீட்டில் இருந்தும் இதே போன்ற ஒரு கடிதத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்படி கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில், குறித்த நபர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்த கொண்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags:tamil businessman commits suicide set fire puttalam , tamil businessman commits suicide set fire puttalam