தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாராப்பான் இடையில்தான் போட்டியா..?

0
839
National Front Pakatan Harappan contest, Pakatan Harappan, National Front, National Front party, National Front party,

{ National Front Pakatan Harappan contest }

மலேசியாவில், 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளைத் தவிர மற்றக் கட்சிகள் யாவும் வாக்குகளைச் இழக்கக்கூடியவை என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

வரும் தேதலில் பாஸ் கட்சி சில நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றினாலும் அரசை அமைக்க முடியாது.

வாக்குச் சீட்டில் முக்கிய இரு கட்சிகளான தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகள் மட்டுமே இருக்கும். வேறு எந்தப் பெயர் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அது வாக்குகளைச் சிதறடிக்கக்கூடியவை என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் தெரிவித்துள்ளார்.

புக்கிட் காப்பாரில் நடைபெற்ற பக்காத்தான் ஹாராப்பானின் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் 4,734 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி, சுயேட்சை வேட்பாளர்களை தோற்கடித்த அஸ்மின் அலி, புக்கிட் அந்தாராபங்சாவில் தேசிய முன்னணி வேட்பாளரை 4,044 வாக்குகள் பெரும்பான்மையில் வீழ்த்தியுள்ளார்.

இந்தப் பொதுத்தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றம் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதியைத் தற்காக்கும் அவர், பல்முனைப் போட்டிகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: National Front Pakatan Harappan contest

<<MOST RELATED CINEMA NEWS>>

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

<<Tamil News Groups Websites>>