600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்

0
1314
mannar nannattan model village submit people sajith premadasa

(sajith premadasa Lester James Peries)
இலங்கை சினிமா துறைக்கு பெரும் பங்காற்றிய கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை கௌரவிக்கும் வகையில் மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

திஸ்ஸமஹாராம புல்பல்லம என்ற கிராமத்தில் அமைக்கப்படும் உதாகம்மான என்ற திட்டத்திற்கே லெஸ்டர் ஜேம்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த சனிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்த கிராமத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற இந்த கிராமம் உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள 700 ஆவது கிராமமாகும்.இது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் 133 ஆவது உதாகம்மான எழுச்சி கிராமமாகும்.

இதேவேளை திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் அமைக்கப்படும் 65 உதாகம்மான கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வறுமையிலுள்ள குடும்பங்களுக்காக நாடு முழுவதும் 50 உதாகம்மான கிராமங்கள் அமைக்கப்படவுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கம் 600 கோடி ரூபாவை இந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளது.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags:sajith premadasa Lester James Peries, sajith premadasa Lester James Peries